கரூர் அரசு கலைக் கல்லூரில் பேராசிரியர்களுக்கான “விளைவு அடிப்படையிலான கல்வி மற்றும் புளும்ஸின் வகைப்படுத்தல் அடிப்படையிலான வினாத்தாள் வடிவமைப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. தேர்வுக்கட்டுப்பாட்டாளர் மற்றும் கல்லூரியின் உள்தரக் கட்டமைப்புப் பிரிவு இணைந்து இதனை நடத்தியது. கல்லூரித் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கற்பகம் தனது வரவேற்புரையுடன் கற்றல் கற்பித்தல் திறன் பற்றிய செய்திகளை எடுத்துரைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் அலெக்ஸாண்டர் தனது தலைமையுரையில், இன்றைய பயிற்சி வாயிலாகப் பேராசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வியைப் போதிக்கும் திறன்கள் பற்றியும், புளும்ஸின் வகைப்படுத்தல் முறையில் வினாத்தாள் அமைப்பது குறித்தும் எழுத்துரைத்தார். விலங்கியல் துறைத்தலைவர் கார்த்திகேயன் வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தாவரவியல் துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் செந்தில்குமார், பொருளியல் துறைப் பேராசிரியர் முனைவர் காளிராஜன் பங்கேற்றனர். அறிவியல் பிரிவுப் பேராசிரியர்கள் மற்றும் கலைப்பிரிவுப் பேராசிரியர்களுக்குத் தனித்தனியாகப் பயிற்சி வழங்கப்பட்டது.
கற்றல் திறன் நுட்பங்கள் பற்றியும் வினாத்தாள்கள் அமைப்பு முறைகளையும் எடுத்துரைத்தார்கள். கணிதத்துறைத் தலைவர் முனைவர் முருகாம்பிகை நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் முகுந்தன், முனைவர் ஜெகதீஸ் பாண்டி, முனைவர் விநாயகம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.