பாரதி இளம் கவிஞர் விருது - 2024


Event Date : 20-08-2024  |   Event Venue : Gac Karur

கல்லூரி கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைப்படி பாரதி இளம் கவிஞர் விருது - 2024 காண கரூர் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கவிதை போட்டியில் 10 கல்லூரிகள் கலந்து கொண்டது.

இப்போட்டியில் ஆடவர் ஒருவர் பெண்டிர் ஒருவர் என தெரிவு செய்யப்பட்டனர். இப் போட்டியில் நம் கல்லூரி வேதியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவன் பூபால் ஒருவரும் கரூர் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவி ஸ்ரீமதியும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு முதல்வர், துறைத் தலைவர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள், அலுவலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.