Events
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
Event Date : 08-07-2024 | Event Venue : Gac Karur
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கடந்த 3/7 /2024 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான்காம் நாளான இன்று 8 /7 /2024 சிறப்பு விருந்தினராக மாண்புமிகு கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் கிடைத்த பாடத்தை சிறப்பாக பயில வேண்டும், கல்வி கற்று பெண்மைக்கு இலக்கணமாக வாழ வேண்டும், அலைபேசியை தவிர்த்து நல்ல ஒழுக்கமுடன் பயமின்றி நற்பண்புகளோடு முன்னேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அவற்றில் இட ஒதுக்கீடு ,மொழி பிரச்சனை, கல்வி உதவித்தொகை, போன்றவைகளைப் பற்றி உரையாடினார். மாணவர்கள் சிறப்புற கவனித்து இன்புற்றனர் . இப் பயிற்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் செ அலெக்சாண்டர் அவர்கள் வரவேற்புரையும் தலைமை உரையும் வழங்கினார். சிறப்பு விருந்தினருக்கு தாவரவியல் துறை தலைவர் முனைவர் இராஜேஸ்வரி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு செயல்முறைகள் துறை சார்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அவரது புகைப்படத்துடன் கூடிய கவிதை மடல் நினைவு பரிசு வழங்கப்பட்டது . இப் பயிற்சி வகுப்பிற்கு வேதியல் துறை தலைவர் முனைவர் சீனிவாசன் நன்றியுரை வழங்கினார். இப்ப பயிற்சியில் அனைத்து துறைத் தலைவர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள், அலுவலக நண்பர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.